×

புதுக்கோட்டை மாவட்டத்தில் முதலமைச்சர் ‘மாநில இளைஞர் விருது” – இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்

புதுக்கோட்டை, மே 1: சமுதாய வளர்ச்சிக்கு சேவையாற்றும் இளைஞர்களது பணியை அங்கீகரிக்கும் பொருட்டு முதலமைச்சர் மாநில இளைஞர் விருது ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்தன்று 15 முதல் 35 வயது வரை உள்ள 3 ஆண்கள் மற்றும் 3 பெண்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருது ரூ.1 லட்சம் ரொக்கம், பாராட்டு பத்திரம் மற்றும் பதக்கம் ஆகியவைகளை உள்ளடக்கியதாகும். 2024ம் ஆண்டிற்கான முதலமைச்சர் மாநில இளைஞர் விருது வரும் 15.8.2024 அன்று நடைபெறும் சுதந்திரதின விழாவில் வழங்கப்பட உள்ளது. இவ்விருது தொடர்பாக கீழ்காணும் தகுதிகள் வரையறுக்கப்பட்டுள்ளன. 15 வயது முதல் 35 வயது வரையுள்ள ஆண், பெண் ஆகியோர் விண்ணப்பிக்கலாம்.

1.4.2023 அன்று 15 வயது நிரம்பியவராகவம், மார்ச் 31.3.2024 அன்று 35 வயதுக்குள்ளாகவும் இருத்தல் வேண்டும். கடந்த நிதியாண்டில் (2023-2024) அதாவது 1.4.2023 முதல் 31.3.2024 வரை மேற்கொள்ளப்பட்ட சேவைகள் மட்டுமே கருத்தில் கொள்ளப்படும். விருதிற்கு விண்ணப்பிக்கும் முன்பு குறைந்த பட்சம் 5 வருடங்கள் தமிழகத்தில் குடியிருந்தவராக இருத்தல் வேண்டும். (அதற்கான சான்று இணைக்கப்பட வேண்டும்). விண்ணப்பதாரர்கள் சமுதாய நலனுக்காக தன்னார்வத்துடன் தொண்டாற்றிருக்க வேண்டும். அவ்வாறு அவர்கள் செய்த தொண்டு கண்டறியப்பட கூடியதாகவும், அளவிடக் கூடியதாகவும் இருத்தல் வேண்டும். ஒன்றிய / மாநில அரசுகள், பொதுத்துறை நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், பள்ளிகளில் பணியாற்றுபவர்கள் இவ்விருதிற்கு விண்ணப்பிக்க இயலாது.

விண்ணப்பதாரருக்கு உள்ளூர் மக்களிடம் உள்ள செல்வாக்கு விருதிற்கான பரிசீலனையில் கணக்கில் கொள்ளப்படும். இணையதளம் மூலம் விண்ணப்பிக்க 1.5.2024 முதல் கடைசி நாள் 15.5.2024 அன்று மாலை 4மணி ஆகும். தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களை மாவட்ட தேர்வுகுழு மூலம் தேர்ந்தெடுப்பதற்கு ஏதுவாக அனைத்து விண்ணப்பதாரர்களும் இணையதளம் மூலம் விண்ணப்பித்த உடன் விண்ணப்பம் மற்றும் சான்றிதழ்களின் 3 பிரதிகளை மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர்நலன் அலுவலரிடம் நேரில் சமர்ப்பிக்க வேண்டும். எனவே மேற்கண்ட நிதியாண்டிற்கு புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள தகுதியுள்ள நபர்கள் www.sdat.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பித்து பயன்பெறலாம். மேலும் விவரங்களுக்கு புதுக்கோட்டை மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் தொலைபேசி எண்.7401703498 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். மேற்கண்ட தகவலை மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா தெரிவித்துள்ளார்.

The post புதுக்கோட்டை மாவட்டத்தில் முதலமைச்சர் ‘மாநில இளைஞர் விருது” – இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் appeared first on Dinakaran.

Tags : District ,Pudukottai ,Independence Day ,
× RELATED புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி...